கொடைக்கானல் மலைப்பாதையில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்த தடுப்புச் சுவர், புதிய தலைமுறை செய்தி் எதிரொலியால் அகற்றப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப் பாதையில், பெருமாள்மலை அடிவாரத்தில் சாலையை அகலப்படுத்தும் பணியின்போது ஒரு தடுப்புச் சுவர் மட்டும் அகற்றப்படாமல் இருந்தது. அதனால் அவ்வழியாகச் செல்லும் வாகனங்கள் தடுப்புச் சுவரில் மோதி விபத்து ஏற்படுவதாகப் புகார் எழுந்தது. இதுதொடர்பாக புதியதலைமுறையில் செய்தி வெளியானது. அதையடுத்து, நெடுஞ்சாலைத்துறையினர் அந்தத் தடுப்புச் சுவரை அகற்றினர்.
கொடைக்கானல் அருகே பாச்சலூரில் சிறுமி சடலமாக மீட்பு-சாலை மறியலில் ஈடுபட்டஉறவினர்கள்
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பாச்சலூரில் ஊராட்சி அரசு துவக்கப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் நேற்று மாலை ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவி பள்ளியின் பின்புறம் உடல் முழுவதும் எரிந்த நிலையில் கிடந்தார் இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இந்நிலையில் குழந்தையின் உறவினர்கள் நேற்று தாண்டிக்குடி ஒட்டன்சத்திரம் சாலையில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக சாலை மறியலில் ஈடுபட்டனர். அதன்பிறகு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் கோட்டாட்சியர் நேரடி விசாரணை செய்து மூன்று …
விபரீதத்தில் முடிந்த ரெட்ராக் செல்ஃபி.. 500 அடி பள்ளத்தில் விழுந்த இளைஞர் மாயம் – கொடைக்கானலில் பரபரப்பு
கொடைக்கானல் வட்டக்கானல் அருகே வனத்துறையினரால் தடை செய்யப்பட்ட ரெட்ராக் பகுதியில் செல்பி எடுக்க முயன்ற மதுரையை சேர்ந்த இளைஞர் மாயம். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு நேற்று மதுரை அண்ணாநகர் பகுதியில் இருந்து 8 நபர்கள் கொண்ட இளைஞர் குழுவினர் சுற்றுலா வந்துள்ளனர், இதனையடுத்து இன்று சுற்றுலா தலங்களை கண்டு ரசித்த இளைஞர் குழுவினர் வட்டக்கானல் அருகே உள்ள வனத்துறையினரால் தடை செய்யப்பட்ட ரெட்ராக் பகுதிக்கு சென்றுள்ளனர். இந்த பகுதி மலைமுகடுகள் நிறைந்த பச்சை பசேல் என ரம்மியமாக …
கொடைக்கானலில் பார்க்கிங் இல்லாத விடுதிகளால் போக்குவரத்து நெரிசல்
கொடைக்கானல் அண்ணா சாலையில் பார்க்கிங் செய்யப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.நகரின் மையப்பகுதியாக உள்ள அண்ணா சாலையில் வர்த்தக நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், வங்கிகள், பத்திரப்பதிவு, தாலுகா அலுவலகம், போலீஸ் ஸ்டேஷன், கூட்டுறவு அங்காடி என பல முக்கிய அலுவலகங்கள் உள்ளன.தினமும் ஏராளமானோர் வந்து செல்லும் நிலையில் வாகனங்களை ரோட்டோரம் பார்க்கிங் செய்வதால் நெரிசல் ஏற்படுகிறது. இங்கு பார்க்கிங் வசதியற்ற விடுதிகள் பல உள்ளன. இதனால் நெரிசல் அதிகமாகி போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது.பல ஆண்டுகளாக தொடரும் இதனை …
கொடைக்கானலில் கழிவுநீரால் சுகாதார கேடு
கொடைக்கானல் டோபிகானல் பெரியகாளியம்மன் கோவில் வளாகத்திற்குள் கழிவு நீர் கடந்த 1 மாத காலமாக ஆறு போல் ஓடுகிறது. இது குறித்து அரசு அதிகாரிகளிடம் தெரிவித்து எந்த ஒரு நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக செயல்படுகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேடு ஏற்படுவதால் நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். இவற்றை அகற்ற அதிகாரியிடம் வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால்ஒரு மாத காலமாக அலட்சியமாக செயல்படும் அரசை கண்டித்து இன்று சாலை மறியலில் ஈடுபட உள்ளோம், என்றனர்.