ஜனவரி 14 முதல் ஜனவரி 18 வரை அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்களுக்கும் அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 16-ந் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதனால் மதுரை அலங்காநல்லூரில் ஜனவரி 16-ந் தேதி நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி ஜனவரி 17-ந் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
அதேபோல் ஜனவரி 18-ந் தேதியன்று தைப்பூசம் என்பதால் முருகன் கோவில்களுக்கு செல்லும் பக்தர்கள் என்ன செய்வார்கள் என்கிற குழப்பம் இருந்தது. இந்த நிலையில் பழனி முருகன் கோவிலில் ஜனவரி 18-ந் தேதி தைப்பூச நாளில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன் அறிவித்துள்ளார்.
மேலும் நாளை தைப்பூச கொடியேற்ற நிகழ்வும் பக்தர்கள் இல்லாமல் நடைபெறும்; தைப்பூச திருவிழா யூ டியூப் மூலம் ஒளிபரப்பு செய்யப்படும். தைப்பூச திருவிழாவில் 10 மண்டகபடிதாரர்களுக்கும் அனுமதி இல்லை. ஜனவரி 21-ல் நடைபெறும் தெப்ப உற்சவத்திலும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply