ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ் திண்டுக்கல் மாவட்டத்தில் 2022-23 ம் கல்வியாண்டின் தேவைகளுக்கான பட்ஜெட் கணக்கிடும் பணி மும்முரமாக நடக்கிறது.மத்திய அரசின் எஸ்.எஸ்.ஏ., ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டங்கள் ஒன்று முதல் 12 ம் வகுப்பு வரையிலான மாணவர்களின் கல்வியை உறுதி செய்ய துவங்கப்பட்டது.
தற்போது இவ்விரு திட்டங்களும் இணைக்கப்பட்டு ஒருங்கிணைந்த கல்வி திட்டமாக செயல்பட்டு வருகிறது.திண்டுக்கல் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் 2022-23 ம் கல்வியாண்டின் தேவைகளுக்கான பட்ஜெட் கணக்கிடும் பணியில் திட்ட அலுவலர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.பள்ளி வகுப்பறை கட்டடம், கழிப்பறை வசதி, மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான தேவை, மேம்பாடு, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான பயிற்சிகள் என ஒவ்வொரு பிரிவின் கீழும் வட்டார வாரியாக பட்ஜெட் கணக்கீடு செய்து திட்டங்கள் ஒருங்கிணைக்கப்படும். ஏற்கனவே பள்ளிகளில் இருக்கும் வசதிகளை மேம்படுத்த வேண்டுமா, புதிய வசதிகள் ஏற்படுத்த வேண்டுமா, என மாணவர்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் கணக்கீடும் பணிகள் நடக்கிறது.இப்பணிகள் இம்மாத இறுதிக்குள் நிறைவடையும். இதையடுத்து திட்டங்கள் மாநில அதிகாரிகளுக்கு அனுப்பப்படும். அவர்கள் மூலம் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு, மாவட்ட வாரியாக நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
Leave a Reply