திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பாச்சலூரில் ஊராட்சி அரசு துவக்கப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் நேற்று மாலை ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவி பள்ளியின் பின்புறம் உடல் முழுவதும் எரிந்த நிலையில் கிடந்தார் இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இந்நிலையில் குழந்தையின் உறவினர்கள் நேற்று தாண்டிக்குடி ஒட்டன்சத்திரம் சாலையில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக சாலை மறியலில் ஈடுபட்டனர். அதன்பிறகு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் கோட்டாட்சியர் நேரடி விசாரணை செய்து மூன்று ஆசிரியர்களை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.ஒட்டன்சத்திரம் மருத்துவமனையில் இருந்த குழந்தையின் உடலை உடற்கூறு ஆய்வு செய்வதற்காக திண்டுக்கல் தலைமை அரசு மருத்துவமனைக்கு இன்று காலை கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் குழந்தையின் உடலை வாங்க மறுத்து குழந்தையின் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனை அறிந்த பழனி சட்டமன்ற உறுப்பினர் இ.பெ. செந்தில்குமார் மற்றும் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாசன் ஆகியோர் குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். குழந்தையின் உடலை வாங்கிச் செல்லுங்கள் என சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது குழந்தையின் உறவினர்கள் குற்றவாளிகளை கைது செய்யாவிட்டால் குழந்தையின் உடலை வாங்க மாட்டோம் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றிய நிலையில் பல முறை சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியும் குழந்தையின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Leave a Reply